games

img

அதிரடி நாயகியை இழக்கும் டென்னிஸ் உலகம்

‘பணக்கார’ விளையாட்டுப் போட்டியான டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வரவிருக்கும் அமெரிக்க ஓபன் தொட ரோடு சர்வதேச டென்னிஸ் விளை யாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவ தாக அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பை வோக் (vogue) என்ற புத்தகம் அட்டைப்பக்கத்தில் படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது.  1981-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் பிறந்த செரினா வில்லி யம்ஸ் 14 வயதில் அதாவது 1995-ஆம் ஆண்டு தனது தந்தை ரிச்சர்ட் வில்லி யம்ஸ் (முன்னாள் அமெரிக்க டென்னிஸ் வீரர்) பயிற்சியின் மூலம் சர்வதேச டென்னிஸ் தொடரில் காலடி வைத்தார். அடுத்த 3 வருடத்திலேயே விம்பிள்டன் (1993) கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

அடுத்த ஒரே வருடத்தில் சொந்த மண்ணில்,நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிரண்ட்ஸ்லாம் (1999) தொடரின் ஒற்றையர் பிரிவில் முதன்முறையாக தனிநபர் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றார். அதன் பிறகு செரீனாவிற்கு ஏறுமுகம் தான். 2012-ஆம் ஆண்டு தனது பயிற்சியாளரான தந்தை ரிச்சர்டை மாற்றி பிரான்ஸ் முன்னாள் டென்னிஸ் வீரர் பாட்ரிக்கை பயிற்சியாளராக மாற்றி விளை யாடினார். பயிற்சியாளரை மாற்றினா லும் ஆட்டத்திறனை தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தார்.  கொரோனா காலம் தொடங்கு வதற்கு முன்பு கடுமையான பார்ம் பிரச்ச னையில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை வென்று அசத்தினார். இது தான் செரீனாவின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடராகும். அதன் பிறகு அமெரிக்க இணைய தொழிலதிபர் அலெக்சிஸ் உடனான காதல், பெண் குழந்தை என ஒரு வருடம் டென்னிஸ் துறையில் ஒதுங்கி, 2018-ஆம் ஆண்டு மீண்டும் சர்வதேச டென்னிஸ் உலகில் கள மிறங்கினார். ஆனால் செரீனாவின் ஆட்டத்திறன் சற்று மாறியது. இருப்பி னும் 2018-ஆம் ஆண்டு விம்பிள்டன், அமெரிக்க ஓபன் இறுதி வரை முன்னேறினார்.  

அதன் பிறகு கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட முக்கிய தொடர்களில் காலி றுதி, அரையிறுதி தான் செரீனாவின் அதிகப்பட்ச வெற்றிகள். கடைசியாக 2022-ஆம் ஆண்டு விம்பிள்டன் தொட ரில் முதல் சுற்றில் வெளியேறினார். வரவிருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மோதவுள்ளார். இதோடு அவரது 27 வருட டென்னிஸ் வாழ்க்கை நிறைவு பெறுகிறது. முக்கிய மாக ரிச்சர்ட் வில்லியம்ஸ் குடும்பத்தின் டென்னிஸ் ஆதிக்கம் விடை பெறுகிறது. வில்லியம்ஸ் குடும்பத்தில் செரீனா வின் சகோதரி வீனஸ் டென்னிஸ் துறையில் நல்ல அடித்தளம் அமைத்து பல பட்டங்களை குவித்திருந்தாலும், செரீனா அளவிற்கு சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனிச்சிறப்புகள்

போட்டியின் பொழுது இங்கி லாந்து வீரர் முர்ரே போன்று சளைக்காமல் போராட்ட குணத்துடன் விளையாடக்கூடியவர் என்றாலும், அதிரடியுடன் வேகமாக ஆட்டத்தை நிறைவு செய்ய அதிகம் விரும்புவார். 

  1. ஆண்களை போல உடற்பயிற்சி (ஜிம் பார்ம்) மேற்கொண்டு கட்டுக் கோப்பாக உடலை வைத்திருக்கும் ஒரே டென்னிஸ் வீராங்கனை ஆவார்.
  2. 70 கிலோ எடையை (பெண்கள் பிரி வில் அதிகபட்ச எடை) கொண்டிருந்தா லும் வேகமாக ஓடி பந்தை அதிரடியாக திருப்பக்கூடியவர்.
  3. சீண்டினால் கடுமையாக கோபத்தை வெளிப்படுத்துவார்.தனக்கு தவறான முடிவு அறிவிக்கப்பட்டால் நடுவர் என்று கூட பார்க்கமாட்டார்.
  4. புள்ளிகள் பெறுவதில் சொதப்பினால் அன்றைய ஆட்டக்கள குப்பை தொட்டி டென்னிஸ் மட்டைகளால் நிரம்பி விடும் (ராக்கெட்டுக்களை உடைப்பார்).
  5. புள்ளிகள் எடுத்தால் மைதானம் அதிரும் அளவிற்கு கத்துவார்.
  6. தோல்வி அடைந்தால் வெற்றி பெற்ற எதிரணி வீராங்கனைகளை வெகு வாக நீண்ட நேரம் கண்டிப்பாக பாராட்டுவார்.

பட்டங்கள்

  1.  கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்: 39
  2.  ஆஸ்திரேலியா- 7 (இரட்டையர் - 4)
  3.  பிரெஞ்சு- 3 (இரட்டையர் - 2)
  4.  விம்பிள்டன்- 7 (இரட்டையர் - 6, 
  5.     கலப்பு இரட்டையர் - 1)
  6.  அமெரிக்கா- 6 (இரட்டையர் - 2, 
  7.     கலப்பு இரட்டையர் - 1)
  8.  ஒலிம்பிக்கில்- 4 பதக்கம் (4 
  9. தங்கம்): 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் தொடரில் அமெரிக்க அணி ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
  10.  டூர் பைனல்ஸ்- 5 
  11.  கிராண்ட்ஸ்லாம் கோப்பை- 1 
  12.  பெடரேஷன் கோப்பை- 1 
  13. (வரலாற்றுச்சாதனையுடன் - 1999) 
     
;