games

img

நிறைவடைந்தது காமன்வெல்த் திருவிழா

இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரான பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு தொடர் திங்களன்று நிறைவு பெற்றது. ஜூலை 29-ஆம் தேதி தொடங்கி மொத்தம் 11 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்திய இங்கிலாந்து நாடுகள் ஆதிக்கம் செலுத்தியது. தொடக்கத்தில் சொதப்பலான செயல்பாடுகளுடன் காமன்வெல்த் தொடரில் சுழன்று கொண்டிருந்த கனடா வீரர் - வீராங்கனைகள் திடீரென உத்வேகம் பெற்று கடைசி 5 நாட்களில் மின்னல் வேகத்தில் பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது கனடா. அதிகம் எதிர்பார்த்த இந்தியா கடந்த காமன்வெல்த் தொடரை (ஆஸ்திரேலியா - 2018) விட குறைவான அளவில் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. (மாலை 4 மணி நிலவரம்)

பி.வி.சிந்துவுக்கு தங்கம்

இந்திய பேட்மிண்டன் துறையில் அதிரடிக்கு பெயர் பெற்ற ஒலிம்பிக் பதக்க நாயகி பி.வி.சிந்து காமன்வெல்த் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், தனக்கு பிடித்த பிரிவான மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடா வீராங்கனை மிச்சேலியை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.  காமன்வெல்த் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வெல்வது  இதுவே முதல் முறையாகும். கடந்த காமன்வெல்த் தொடரில் சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும், ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;