games

img

ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை, இரட்டையர் பிரிவில் உலகின் முதல்  நிலை (ரேங்க்) வீராங்கனை, அதிரடிக்கு பெயர் பெற்ற வீராங்கனை என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் டென்னிஸ் உலகை மிரட்டிய சானியா மிர்சா டென்னிஸ் விளையாட்டிலி ருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா (35 வயது) வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல்  நடைபெறவுள்ள துபாய் சர்வதேச டென்னிஸ் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.