games

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்...  ரஷ்ய வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி... 

பாரீஸ் 
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது காலியிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.  

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலியிறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், 5-ஆம் நிலை வீரரான கிரீஸ் நாட்டின் சிட்சிபாஸை எதிர்கொண்டார். டென்னிஸ் உலகின் இளஞ்சிங்கம் என வர்ணிக்கப்படும் அதிரடி நாயகன் சிட்சிபாஸ் (22 வயது) தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். போராட்டம் குணமிக்க மெத்வதேவ் பல்வேறு வகையில் போராடியும் பலனில்லை.

இறுதியில் கிரீஸின் சிட்சிபாஸ் 6-3, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில்  ரஷ்யாவின் டேனில் மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். சிட்சிபாஸ்  அரையிறுதியில் ஜெர்மனியின் ஜுவரேவை எதிர்கொள்கிறார். ஜுவரேவ் உலக தரவரிசையில் 6-ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

;