games

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : 2வது முறையாக ஒசாகா சாம்பியன் பட்டம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா, அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடி இருவரும் மோதினர். இந்த ஆட்டத்தில் அமெரிக்கா ஜெனிஃபரை 6-4, 6-3 என்ற செட் கனக்கில் வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஒசாகா சாம்பியன் பட்டத்தை வென்றார்.மேலும் இக்கோப்பை அவர் 2 வது முறையாகப் பெறுகிறார். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு இத்தொடரை வென்று கோப்பையை அவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

;