games

img

போராட்டத்துடன் பதக்கத்தை வென்ற மகளிர் அணி

மகளிர் பிரிவில் ஹம்பி, வைஷாலி, தனியா, குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய “ஏ” அணி 17 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும், 19 புள்ளிகளுடன் உக்ரைன் தங்கப்பதக்கமும், 18 புள்ளிகளுடன் ஜார்ஜியா வெள்ளி பதக்கத்தையும் கைப்பற்றியது.

தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா அபாரம்

ஓபன் பிரிவில் இந்தியா “பி”  அணியில்  இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா ஜெர்மனியின் ராஸ்மஸை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 49வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா  போட்டி யை சமன் செய்தார். பிரக்ஞானந்தாவின்  அசத்தலான முடிவால்  இந்தியா “பி” அணி புள்ளிகளை எதுவும்  இழக்காமல் வெண்கலப் பதக்கத்தை வென்றது.

உலக சாம்பியன் விளையாடவில்லை

நடப்பு செஸ் உலக சாம்பி யனான நார்வே நாட்டின் மேக்னல் கார்ல்சன் இறுதிச்சுற்றில்  விளையாடவில்லை.  நார்வே அணி பதக்க பட்டியலுக்கான ஆட்டத்தில் இடம்பெறாததால் மேக்னல் கார்ல்சன் கடைசி சுற்று ஆட்டங்களில் விளையாடாமல் ஓய்வு எடுத்தார்.

அடுத்த ஒலிம்பியாட் எங்கு?

செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் உஸ்பெ கிஸ்தான் நாட்டில் 45-வது செஸ்  ஒலிம்பியாட் தொடரை (2026-ஆம் ஆண்டு) நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடப்பு சீசன் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கப்பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

;