games

img

தொடரை கைப்பற்றுமா இந்தியா? இன்று 2-வது டி-20

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது டி-20 தொட ரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலை யில், வெள்ளியன்று மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் 2-வது டி-20 போட்டி நடை பெறுகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், முதல் போட்டியின் தோல்விக்கு பதிலடி கொடுக் கும் முனைப்பில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் 2-வது டி-20 போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடம் : ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா
நேரம் : இரவு 7 மணி 
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி - வரிசைகள்)