games

டி-20 லீக் தொடரில் விளையாட ஏன் இவ்வளவு விருப்பம்?

டி-20 லீக் விளையாடும் போது...

டி-20 லீக் தொடரில் ஜாலியாக இருக்கலாம். உடற்தகுதி பிரச்சனை இல்லை. பணம் நன்றாக  கிடைக்கும். விரும்பும் அனைத்து வசதிகளையும் அணி நிர்வாகம் நிறைவேற்றி விடும். தோல்வி  மற்றும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி னால் விமர்சனம் (திட்டு) எதுவும் கிடையாது. பயிற்சி ஆட்டம் போன்று இஷ்டத்திற்கு விளையாடலாம். இத னால் தான் டி-20 லீக் போட்டிகளை மேற்கு இந்தியத் தீவுகளின் அணிகள் அதிகம் விரும்புகிறார்கள்.

நாட்டுக்காக விளையாடும் போது...

நாட்டுக்காக விளையாடினால் கட்டுப்பாடு கடுமை யாக இருக்கும். ஒழுங்காக விளையாட வேண்டும். ஆடும் லெவனில் இல்லை என்றாலும் கடுமை யான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆட்டத்தில் சொதப்பினாலும் ஆட்டம் முடிந்தவுடன் லெப்ட் ரைட் தான்.  அரசாங்கம் கொடுக்கும் சம்பளம் மட்டுமே வழங்கப்படும். போட்டிகளில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசுகள் மட்டும்  தான் வீரர்களுக்கு கிடைக்கும் பரிசு. தனிநபர் கவனிப்பு கிடை யாது. உடை, உணவு, நகர் உலாவல் ஆகியவை மட்டுமே அனுமதி.  

நாட்டுப் பற்று பற்றி பாடம் எடுத்த பயிற்சியாளர்...

“இது வேதனையாக உள்ளது. எங்களால் வேறு என்ன செய்ய  முடியும்? உங்கள் நாட்டுக்காக விளையாடுங்கள் என அவர் களிடம் நான் சென்று கெஞ்ச முடியாது. ஒவ்வொரு வீரர்களும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் காலம் தற்போது மாறிவிட்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு விளையாடுவதை விடவும் வேறு அணிகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் அளித்தால் நிலைமையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். பில் சிம்மன்ஸ் கூறிய  கருத்து சாதாரணமானது அல்ல. அவர் கூறிய கருத்து கிரிக்கெட் விளை யாடும் ஒவ்வொரு வீரர்களின் நாட்டுப்பற்றை கேள்வி எழுப்பும் கருத்தாகும்.

இந்தியா போன்று கட்டுப்பாடு இருப்பது அவசியம்

இந்திய நாட்டு கிரிக்கெட் வீரர் - வீராங்கனைகள் வெளிநாட்டு டி-20 லீக் தொடர்களில் விளையாட செல்வதாக இருந்தால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) கட்டாயம் அனுமதி வாங்க வேண்டும். பிசிசிஐ அனைவருக்கும் அனுமதி வழங்காது. இந்திய அணி யின் சர்வதேச தொடர்கள், வீரர்களின் எதிர்கால நலன், உல கக்கோப்பை பயிற்சி திட்டம் போன்றவைகளை ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்கும். இதனால் தான் இந்திய வீரர் - வீராங்கனைகள் உள்நாட்டு ஐபிஎல் தொடரை விட வெளிநாட்டு தொடர்களில் அதிகம் தலைகாட்டமாட்டார்கள்.

பயிற்சியாளர் சிம்மன்ஸின் சாதாரண பேட்டி மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகம் தனி கவனத்துடன் நடவடிக்கை எடுக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை  மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  ஐசிசி இதுதொடர்பாக விளக்கம் கேட்டு டி-20 லீக் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

;