மழை வருமா?
புதனன்று நிலவரப்படி
மெல்போர்ன் நகரில் 80% மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று மழை வரும், இவ்வளவு மழை பொழியும், இந்த நேரத்தில் பெய்யும் என ஆஸ்திரேலிய வானிலை தினந்தோறும் வானிலை அறிவிப்புகளை வெளியிட்டு வரு கிறது. வானிலை அறிக்கைகள் பற்றிய செய்திக்கு பின்னரே ஆஸ்திரேலியா வில் இருக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் டிக்கெட் எடுப்பது குறித்து பரிசீலனை செய்கின்றனர். அதாவது மழைக்கு வாய்ப்பு என்றால் டிக்கெட் எடுக்கமாட்டார்கள். மழை வராது என செய்திகள் வந்தால் டிக்கெட் எடுக்க கவுண்டர்களின் நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலை தான் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை தற்போது நிலவுகிறது. ஆனால் ஒருசில நாட்கள் மட்டுமே இந்த வானிலை அறிக்கைகள் சாத்திய மாகும் நிலையில். தினமும் பல்வேறு குளறுபடி நிலவுகிறது. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் தடைபடும் என வானிலை அறிக்கை கூறப்பட்டது.
ஆனால் பெரியளவில் மழை ஒன்றும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆட்டத்தில் மழை வாய்ப்பு வெகுவாக குறைவு என கூறப்பட்டது. ஆனால் மழை ஒரு புரட்டு புரட்டியெடுத்தது. மழை தொடர்பான அறிவிப்பு களால் உலகக்கோப்பையை பார்க்கச் செல்லும் ரசிகர்கள் ஒரு வித கலக்கத் தில்தான் தொடரை பற்றி நினைக்கிறார் கள். இந்த மழையால் திடமான, உறுதி யான சூழல் இல்லாததால் ஆஸ்திரே லியாவில் உள்ள உள்நாட்டு, வெளி நாட்டு ரசிகர்கள் ஒருவித சோர்வுடனே உள்ளனர். இதனால் டிக்கெட் வருவா யில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளில் நிதிநெருக்கடி உள்ள சூழலில் பல ஆயிரம் கோடி செலவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக் கெட் வாரியம். வாரியத்திற்கு முக்கிய வரு வாய் டிக்கெட் விற்பனை தான். இந்த வரு வாயில் மழை புகுந்து விளையாடுவது தான் மிகவும் சோகமான விஷயம் ஆகும்.
இங்கிலாந்து - அயர்லாந்து
நேரம் : காலை 9:30 மணி
இடம் : மெல்போர்ன்
இன்றைய ஆட்டங்கள்
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான்
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : மெல்போர்ன்