games

img

வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார்  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு.

சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் அறிவித்துள்ளார்.

37 வயதான வினய் குமார் கடந்த 2010-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்காக அறிமுகம் ஆனார். மே 28-ந்தேதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்..

இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள், 9 டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இருப்பினும் 2013 -க்கு பிறகு வினய் குமார்க்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

2004 ஆண்டில் இருந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வந்த வினய் குமார்,புதுச்சேரி அணி சார்பாகக் கடந்த ஆண்டு ரஞ்சி  கோப்பையில் கடைசியாக விளையாடினார். கர்நாடக அணிக்கு தலைமை தாங்கி ரஞ்சி கோப்பை , விஜய் ஹசாரே கோப்பை , இராணி கோப்பை என மூன்று பட்டங்களை அடுத்தடுத்து இரு வருடங்களில் வென்றுள்ளார்.

இவர் 139 ஆட்டங்களில்  504 விக்கெட்டுகளை எடுத்துள்ளர். ரஞ்சி கோப்பை போட்டியில் 442 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்து வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர்களில் 4 ஆம் இடத்தில் உள்ளார்.

மேலும் ஐபில் போட்டியில் ஆர்சிபி, கேகேஆர் , மும்மை இந்தியன்ஸ் , கொச்சி டஸ்கர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடினார்.


 

;