games

img

விஜய் ஹசாரே கோப்பை : ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி தோல்வி

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் ஆந்திர அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தமிழகத்தை வென்றுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழக அணி முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இந்தூரில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்திற்கு எதிராக ஆந்திர அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. தமிழக அணிக்கு ஆந்திர அணியின் பந்து வீச்சு சாவலாக இருந்தது. பாபா அபராஜித் 40 ரன்களும், சோனு யாதவ் 37 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்நிலையில் தமிழக அணி 41.3 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. ஆந்திர அணியின் சோயிப் முகமது கான், ஸ்டீபன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

ஆந்திர அணி 29.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்று பெற்றது. 
 

;