games

img

இங்கிலாந்து அணியை விட்டு வெளியேறுகிறார் டாம் ஹாரிசன்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடு களின் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த டாம் ஹாரிசன் அப்பொறுப்பில் இருந்து வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விட்டு  வெளியேறுவார் என இங்கிலாந்து மற்றும்  வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தகவல் வெளி யிட்டுள்ளது. இதற்கான  முழுமையான கார ணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.  கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக புதிய திட்டங்கள் மூலம் வேறு நிலைக்கு புத்துணர்ச்சியுடன் கொண்டு சென்றார். இதற்காக ஹாரிசன் பல்வேறு பழியை எதிர்கொண்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனமான ஐஎம்ஜி-யிலிருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு மாறினார் டாம் ஹாரிசன்.

ஐபிஎல்  இன்றைய ஆட்டங்கள்

கொல்கத்தா லக்னோ 
இடம் : பாட்டீல் மைதானம்,
நவி மும்பை
நேரம்: 7:30 மணி

(லீக் ஆட்டங்கள்
மே 22ஆம் தேதியுடன்  நிறைவுபெறுகிறது. பிளே ஆப் சுற்றுகள் மே 24ஆம் தேதி துவங்குகின்றன)

;