15-வது சீசன் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் 2 நகரங்களில் (புவனேஸ்வர், ரூர்கேலா) நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.
இந்தியா அவுட்... அமைதியானது புவனேஸ்வர்...
போட்டியை நடத்தும் நாடு மற்றும் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி தனது கிராஸ்-ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் (3-3 (5-4 பெனால்டி)) தோல்விகண்டு உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிகழ்வு காரணமாக புவனேஸ்வரில் குவிந்து இருந்த உள்ளூர், வெளிமாநில இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் விடைபெற்றனர். இதனால் புவனேஸ்வர் அமைதி பூங்காவாக மாறியது.
இன்றைய காலிறுதி ஆட்டங்கள்
ஆஸ்திரேலியா - ஸ்பெயின்
நேரம் : மாலை 4:30 மணி
பெல்ஜியம் - நியூசிலாந்து
நேரம் : இரவு 7:00 மணி
இரண்டு ஆட்டங்களும் புவனேஸ்வரில்...