games

img

இளையோர் உலகக்கோப்பை யாருக்கு?

15-ஆவது சீசன் ஆடவர் இளை யோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர் கள்) தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி தொடங்கியது. 

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ் தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம் என 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா, தென் ஆப்பி ரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணி கள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா வும், ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும் வீழ்த்தின.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ் தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம் என 16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா, தென் ஆப்பி ரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணி கள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா வும், ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும் வீழ்த்தின.

யாருக்கு வாய்ப்பு?
பொதுவாக இளை யோர் உலகக் கோப்பையில் விளையாடும் அனைத்து வீரர்களும் 19 வயதிற்குட்பட்ட இளங்கன்றுகள் ஆவர். வயதிற்கு ஏற்ப பக்கு வமில்லாத அதிரடி மனநிலையிலேயே வீரர்கள் விளையாடுவார்கள் என்பதால் இறுதிப் போட்டி யில் என்ன நடக்கும்? யார் வெற்றி பெறுவார்கள்? இந்த அணிதான் கோப்பையை வெல்லும் என திடமாக ஆருடம் கூட கூற முடியாது. 

எனினும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தங்களது பலத்தில் சரிசம அளவில் உள்ள நிலையில்,  6-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், 4-ஆவது முறை யாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் என இரு அணிக ளும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் இறுதி ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

பரிசுத்தொகை
இளையோர் உலகக்கோப்பைக்கான மொத்தப் பரிசுத்தொகை ரூ.12 கோடி என கூறப்படுகிறது. ஆனால்  சாம்பியன் அணிக்கு இவ்வளவு பரிசுத்தொகை, 2-ஆம் இடம் பிடித்த அணிக்கு இவ்வளவு பரிசுத்தொகை என தெளிவாக எவ்வித அறிக்கையும் இதுவரை வெளியாக வில்லை. ஆனால் மொத்த பரிசுத்தொகையில் 40 முதல் 45% தொகையை சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. 2-ஆம் இடம், அரையிறுதி, “சூப்பர் 6” சுற்றுக்கு தகுதிபெற்ற அணி களுக்கு குறிப்பிட்ட பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா

நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : வில்லோமூர் மைதானம், சகாரா பார்க், தென் ஆப்பிரிக்கா

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)