games

img

டி20 உலகக் கோப்பை - முதல் ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி நமீபியா வீரர் சாதனை 

டி20 உலகக் கோப்பையில் முதல் ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி நமீபியா வீரர் ரூபன் டிரம்பெல்மேன் சாதனை படைத்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-நமீபியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அப்போது முதல் ஓவரை வீசிய நமீபியா வீரர் ரூபன் ட்ரெம்பல்மேன் முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். 

23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர்,  ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் ஜார்ஜ் முன்சி, கேலம் மேக்லியோட் மற்றும் அந்த அணியின் கேப்டன் ரிச்சி பெரிங்டன் என மூவரையும் முதல் ஓவரில் டக் அவுட் செய்தார். இந்த ஆட்டத்தில் ரூபன் ட்ரெம்பல்மேன் வீசிய 4 ஓவர்கள்  17 ரன்களை மட்டுமே ஸ்காட்லாந்து அணி வீரர்களால் எடுக்க முடிந்தது. 

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லந்து 20 ஓவர்களின் முடிவில் 109 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய நமீபியா அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

;