games

img

டி20 உலகக் கோப்பை : இன்று தொடங்கும் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் மோதும் ஆஸி - தென்னாப்பிரிக்கா அணி 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தொடங்கும் சூப்பர்-12 சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.  

ஒமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை தொடரின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து 12 அணிகள் பங்கேற்கும் சூப்பர் -12 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்குத் துபாயில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மோதுகிறது.

சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள ஒவ்வொரு அணியும், அந்த அணி இடம் பெற்றிருக்கும் பிரிவில் உள்ள மற்ற 5 அணிகளோடு விளையாடும். இதனால், ஒவ்வொரு அணிக்கு 5 போட்டிகள் என மொத்தம் 30 போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

;