games

img

விளையாட்டு செய்திகள்

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் - 2024
கடைசி அணியாக “சூப்பர் 8” சுற்றுக்குள் வங்கதேசம்

மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொட ரில் தற்போது லீக் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், திங்களன்று நடை பெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் வங்க தேசம் - நேபாளம் (“குரூப் டி”) அணிகள் மோதின. 

டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து  வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 19.3 ஓவர்களில் 106 ரன் களுக்கு ஆட்டமிழந்தது. 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி 19.2 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இதன் மூலம் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கடைசி அணியாக “சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்ற இலங்கை, பாகிஸ்தான்

முன்னாள் சாம்பியன் அணிகளான இலங்கை, பாகிஸ்தான் அணிகள் சொதப்பலான ஆட்டம் மற்றும் மழை காரணமாக டி-20 உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் இரு அணிகளும் வெற்றியோடு விடைபெற்றன.

36ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியும், 38ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியும் வீழ்த்தி இரு அணிகளும் ஆறுதல் வெற்றியுடன் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல விமான நிலையத்தை அடைந்தது.

இன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு

உலகக்கோப்பை டி-20 தொடர் நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், செவ்வாயன்றுடன் லீக் ஆட்டங்கள் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து புதனன்று (ஜூன் 19) “சூப்பர் 8” சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.  

கடைசி லீக் ஆட்டம்

மேற்கு இந்தியத் தீவுகள் - ஆப்கானிஸ்தான்
இடம் : லூசியா, மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6 மணி

“சூப்பர் 8” சுற்றுக்கு 
முன்னேறிய அணிகள்
“குரூப் 1”
இந்தியா (“குரூப் ஏ”)
ஆப்கானிஸ்தான் (“குரூப் சி”)
ஆஸ்திரேலியா (“குரூப் பி”)
வங்கதேசம் (“குரூப் டி”)
“குரூப் 2”
மேற்கு இந்தியத் தீவுகள்  (“குரூப் சி”)
தென் ஆப்பிரிக்கா  (“குரூப் டி”)
இங்கிலாந்து (“குரூப் பி”)
அமெரிக்கா (“குரூப் ஏ”)

ஐரோப்பிய கோப்பை
 கால்பந்து - 2024

இன்றைய ஆட்டங்கள்

துருக்கி - ஜார்ஜியா
இடம் : டார்ட்மண்ட், ஜெர்மனி
நேரம் : இரவு 9:30 மணி

போர்ச்சுக்கல் -செக்குடியரசு
இடம் : லெயிப்ஜிக், ஜெர்மனி
நேரம் : நள்ளிரவு 12:30 மணி