games

img

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தலைவரான அமித்ஷா மகன்.... இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அவர்தான் செயலாளர்....

புதுதில்லி:
இந்தியாவிலேயே மிகக்குறுகிய காலத் தில் பல கோடி ரூபாய் ‘சம்பாதித்தவர்’ என்ற சிறப்பைப் பெற்றவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா.

ஜெய்ஷாவுக்கு சொந்தமான ‘டெம்பிள் எண்டர்பிரைசஸ்’ எனும் நிறுவனத்தின் வர்த்தகம், 2014-2015-ஆம் ஆண்டில் 50 ஆயிரம் ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், அடுத்த ஓராண்டுக்குள்-அதாவது, 2015-2016-ஆம் ஆண்டில் 80 கோடியே 50 லட்சம் ரூபாயாக விஸ்வரூபமெடுத்தது. சுமார் 16 ஆயிரம் மடங்கு வளர்ச்சி இது. அசையா சொத்துகள், முதலீட்டாளர் கள், கைவச சரக்குகள் என எதுவுமே இல்லாதஒரு நிறுவனம், எப்படி இவ்வளவு லாபம் சம்பாதித்தது? என்று ‘தி வயர்’ உள்ளிட்ட ஊடகங்கள் அப்போதுகேள்வி எழுப்பின. கடுமையான விவாதங்களும் எழுந்தன. எனினும் அவை அமுக்கப்பட்டு விட்டன.

இதற்கிடையே, கோடிக்கணக்கில் பணம்கொழிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியத்திற்கு, போட்டியே இல்லாமல் அதன்செயலாளராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப் பட்டார். முன்பு குஜராத் மாநில கிரிக்கெட் வாரியத்தில் உறுப்பினராக மட்டுமே இருந்தவர், அமித்ஷா செல்வாக்கால் திடீரென பிசிசிஐ-க்கே செயலாளரானார்.தற்போது பிசிசிஐ செயலாளராக இருக் கும்போதே 24 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

;