games

img

விஜய் ஹசாரே கோப்பையில் 173 ரன்கள் எடுத்து இசான் கிஷன் சாதனை

விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் 94 பந்துகளுக்கு 173 ரன்கள் எடுத்து ஜார்கண்ட் அணி கேப்டன் இசான் கிஷன் சாதனை படைத்துள்ளார்.

இந்தூரில் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி  தொடர் நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மைதானத்தில் களமிறங்கிய ஜார்கண்ட் அணியின் கேப்டன் இசான் கிஷன் மத்திய பிரதே அணியின் பந்து வீச்சுக்கு தக்க பதிலடி கொடுத்தார். 

கிஷன் 5 சிக்ஸர்கள் , 12 பவுண்டரிகள் என 72 பந்துகளில் சதம் அடித்தார். இதை தொடர்ந்து 94 பந்துகளில் 173 ரன்கள் குவித்தார்.  அடுத்தடுத்து வந்த விராட் சிங் ( 49 பந்துகளில், 68 ரன்கள்),சுமித் குமார் (58 பந்துகளில் 52 ரன்கள்) மற்றும் அனுகுல் ராய் (39 பந்துகள் 72 ரன்கள் ) ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதன் மூலம் ஜார்கண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 422 ரன்கள் எடுத்தது. 
விஜய் ஹசாரே தொடரில் இதுவே ஒரு அணியின் அதிகபட்ச ரன்னாகும்.

;