games

img

முன்னிலை பெறப்போவது இந்தியாவா? இங்கிலாந்தா?  நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி...  

அகமதாபாத் 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.   

4 போட்டிகளை டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியுடன் தொடரை சமனில்  வைத்துள்ள நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலத்தின் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானங்களுள் ஒன்றான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும் முனைப்பில் களமிறங்குவதால் இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தொடங்கும் நேரம் : மதியம் 2:30 மணிக்கு 

இடம் : சர்தார் படேல் மைதானம், அகமதாபாத்

;