games

img

ஹைதராபாத்திலும் ஐபிஎல் போட்டிகள்  நடைபெற வேண்டும் - தெலுங்கானா அமைச்சர் கோரிக்கை

ஐபிஎல் போட்டி ஆட்டங்கள் ஹைதராபாத்திலும் நடைபெற வேண்டும் என்று தெலுங்கானா அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை. பெங்களூர், மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத் , தில்லி ஆகிய 6 நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஹைதராபாத்திலும் ஐபிஎல் போட்டிகள்  நடத்த வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமா ராவ். ட்விட்டரில் கூறியதாவது :
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பெருநகரங்களில் ஹைதராபாத்தில் தான் குறைந்தளவு கொரோனா நோயாளிகள் உள்ளார்கள். ஐபிஎல் போட்டிகளை நடத்த தெலுங்கானா அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் ஹைதராபாத்திலும் நடத்த பிசிசிஐ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் சார்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பங்கேற்று வருகிறது.


 

;