games

img

விவசாயிகள் போராட்டத்திற்கு பயந்து மொகாலியில் ஐபிஎல் போட்டி ரத்து.... பிசிசிஐக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம்....

சண்டிகர்:
பதினான்காவது ஐபிஎல் கிரிக்கெட்போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், இம்முறை பஞ்சாப் மாநிலம் மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் எதுவும் நடைபெறாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.
சென்ற வருடம் கொரோனா தொற்று அபாயம் காரணமாக ஐபிஎல்போட்டிகள் துபாயில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டன. எனவே, இந்த வருடம் இந்தியாவில் நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.இந்நிலையில், பஞ்சாப் மாநிலம்மொகாலியில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என அறிவித்து பிசிசிஐ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்கும்வாய்ப்பு உள்ளதாலும், விவசாயிகள் போராட்டம் காரணமாக, கலவரங்கள் வெடிக்கலாம் என்பதாலும், மொகாலியில் போட்டிகளை நடத்தவில்லை என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. 

ஆனால், “நாளொன்றுக்கு 9 ஆயிரம் கொரோனா பாதிப்புகளை சந்திக்கும் மும்பையில் ஐபிஎல் போட்டியை நடத்தும்போது பஞ்சாப் பில் ஏன் நடத்த முடியாது?” என்று கேள்வி எழுப்பி, பிசிசிஐ-க்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.மொகாலியில் போட்டிகள் நடக்கவேண்டும் என்று கூறியுள்ள அவர்,போராட்டத்தில் கலவரங்கள் நிகழாமல் அரசு முழுப் பாதுகாப்பு அளிப்பதுடன், கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

;