games

img

ஐபிஎல் 2021 : இன்று டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் இன்று மோதுகின்றனர்.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலும், கேன் வில்லியன்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது.

இந்நிலையில், தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் ஐதராபாத் அணியும், மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்குச் செல்ல டெல்லி அணியும் முனைப்புக் காட்டி வருவதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. 

;