games

img

ஐபிஎல் 2021 : ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதல் 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இந்த இரண்டு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 8 தோல்வி , ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

அதேபோல் 9 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 4-வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி ராஜஸ்தான் அணிக்கு முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று  வாய்ப்புக்கான நெருக்கடி குறையும். இதற்கு முன்பு இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

 

;