games

img

ஐபிஎல் 2021: ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் இன்று மோதல் 

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், 32வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 3 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திலும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி 3 வெற்றி, 5  தோல்வியுடன் 7-வது இடத்திலும் உள்ளது. நடப்பு சீசனில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியதால், முந்தைய தோல்விக்குப் பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணியினர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. 

 

;