games

img

விளையாட்டு...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இந்திய அணி அறிவிப்பு

டெஸ்ட் போட்டியின் சுவா ரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சர்வதேச டெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் புதிய தொடரை சர்வதேச கிரிக்கெட் சம்மேள னம் நடத்தி வருகிறது. 2019-2021ஆம்  ஆண்டு கால கட்டத்தில் நடைபெற்ற முதல் சீசனில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், 2-வது உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021-2023) தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிக்கு முன்னேறியது. ஜூன் மாதம் 7-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கான வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலியா அணி ஏற்கெனவே அறிவித்த நிலையில், இந்திய அணியும் செவ்வாயன்று வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.  வீரர்கள் விபரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, கே.எல்.ராகுல் (விக்., கீப்பர்), புஜாரா, ரஹானே, சப்மன் கில், அஸ்வின், பரத்  (விக்., கீப்பர்), ஜடேஜா, அக்சர் படேல்,  ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ். நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக பேட்டிங்கில் மிரட்டி வரும் ரஹானே சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் - 2023

தமிழ்நாட்டில் ஏப்., 30-ஆம் தேதி ஐபிஎல் போட்டி
ஏப்.,27-இல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்துக்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விற்பனை வரும் 27-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. 

    கவுண்டர்களும்           விலையும் 
சி.டி.இ (கீழே)                ரூ.1500
ஐ.ஜே.கே (மேலே)           ரூ.2000
ஐ.ஜே.கே (கீழே)             ரூ.2500
சி.டி.இ  (மேலே)             ரூ.3000
டிஎம்கே (மொட்டை மாடி)  ரூ.5000

ஜெர்சியில் “காவி” வண்ணத்தை நீக்கிய மும்பை அணி

ஐபிஎல் தொடரின் முக்கிய நட்சத்திர அணியும், 5 முறை சாம்பியனான மும்பை அணி எப்பொழுதும் இல்லாத  வகையில் தனது ஜெர்சியின் பக்கவாட்டில் திடீரென “காவி” வண்ணத்தை அச்சிட்டு ஒன்றிரண்டு ஆட்டங்களில் (தோராயமாக) விளையாடியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், திடீரென “காவி” வண்ணத்தை அச்சிட்டது போலவே, திடீரென “காவி” வண்ணத்தை நீக்கி வழக்கம் போல சில்வர் வரிகளை கொண்ட ஜெர்சியில் களமிறங்கியது. 

ஜெர்சிகளை மாற்றும் அணிகள் 2 மட்டுமே

ஐபிஎல் தொடரில் பெங்களூரு, தில்லி ஆகிய 2 அணிகள் மட்டுமே ஜெர்சிகளை ஒரு போட்டி யில் மாற்றி விளையாடும். பெங்களூரு அணி பசுமையை  வலியுறுத்தி பச்சை நிறத்தில் ஜெர்சியை மாற்றி விளை யாடும். இந்த சீசனில் ஜெர்சியை மாற்றி விளையாடியது. தில்லி அணி எல்ஜிபிடிக்யு (ஓரினச்சேர்க்கை)-க்கு ஆதரவாக  வானவில் ஜெர்சியை அணிந்து விளையாடும். நடப்பு சீசனில் தில்லி அணி இன்னும் ஜெர்சியை மாற்றவில்லை. மற்ற 8 அணிகள் ஜெர்சியை மாற்றுவது கிடையாது. ஆனால் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அம்பானியின்  மும்பை அணி மட்டுமே திடீரென ஜெர்சியை “காவி” வண்ணத்திற்கு மாற்றி பாஜக அரசியல் ஆதரவு சர்ச்சையில் சிக்கியுள்ளது. பாஜக எம்பி கம்பீர் ஆலோசனையில் உள்ள ஐபிஎல் அணியான லக்னோ அணி “காவி” வண்ணத்துடன் தொடக்கம் முதலே விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்
கொல்கத்தா - பெங்களூரு (36)
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு     
நேரம் : இரவு 7:30 மணி

சேனல்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (தொலைக்காட்சி), ஓடிடி 
(ஸ்மார்ட் சர்வீஸ்)