games

img

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023

கடைசி இடத்தில் உள்ள இங்கிலாந்து தப்புமா?
இன்று இலங்கையுடன் மோதல்

இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், வியாழனன்று நடைபெறும் 25-ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10) இங்கிலாந்து அணியும், 9-ஆவது இடத்தில் இலங்கை அணியும் உள்ளன.  இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிக முக்கியமான ஆட்டமாகும். காரணம் வெற்றி பெறும் அணி 4 புள்ளி களைப் பெற்று கங்காரு தாவலில் ஒரே அடியாக ரன் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 4-ஆவது இடத்திற்கு கூட முன்னேற வாய்ப்புள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால், வியாழனன்று நடைபெறும் ஆட்டம் மிகுந்த பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா
நேரம் : மதியம் 2:00 மணி
இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும், ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி சீனா - 2023

உலக சாதனையுடன் தங்கம் வென்ற சுமித்

மாற்றுத் திறனாளிகள் பங் கேற்கும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடரின் 4-ஆவது சீசன் கடந்த அக்., 22 அன்று  சீனாவின் ஹாங்சோ நகரில் தொடங்கி யது. அக்., 28 வரை நடைபெறும் இந்த  தொடரின் 3-ஆவது நாளான புதனன்று ஆடவர் எப்64 ஈட்டி எறிதல் பிரிவில் இந்தி யாவின் சுமித் ஆன்டில் 73.29 மீ தூரம் ஈட்டியை எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திரா 62.06 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதே போல ஆடவர் எப்37 ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஹானியும் தங்கப் பதக்கம் வென்றார். 

டேபிள் டென்னிஸ் : ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சந்தீப் தாங்கி வெண்கலப்பதக்கம் வென்றார். இதே போல மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்க னை பவினா வெண்கலம் வென் றார்.  வில்வித்தை : ஆடவர் இரட்டை யர் பிரிவில் ஹர்விந்தர் - சாஹில் ஆ கியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது. இதே போல மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சீட்டல் - சரிதா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது.  வட்டு எறிதல் : மகளிர் எப்54 பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா வெள்ளிப்பதக்கம் வென்றார்.  பேட்மிண்டன் : மகளிர் ஒற்றை யர் பிரிவில் (எஸ்எல்3) இந்தியாவின் மானசி ஜோஷி வெண்கலப்பதக்கம் வென்றார். இதே போல கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நித்தேஷ் - துளசிமதி ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. மற்றொரு கலப்பு இரட்டையர் பிரி வில் இந்தியாவின் மனிஷா - பிரமோத் ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது.   தடகளம் : ஆடவர் 200 மீ ஓட்டப் பந்தயத்தில் (டி35) இந்திய வீரர்  நாராயண் தாக்கூர் வெண்கலப் பதக்கம் வென்றார்.