games

img

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் டேல் ஸ்டெய்ன் 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவித்துள்ளார். 

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக மதிப்பிடப்படும் டேல் ஸ்டெய்ன்,திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  38 வயதான ஸ்டெய்ன், தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்டுகள், 125 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ஸ்டெய்ன், கடைசியாகக் கடந்த வருடம் டி20 சர்வதேச ஆட்டத்தில் விளையாடினார். 

2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டியில் விளையாடும் டேல் ஸ்டெய்ன், இதுவரை 95 ஆட்டங்களில் விளையாடி 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2020 ல் ஆர்சிபி அணி சார்பாக 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நிலையில், 2021 ஐபிஎல்  போட்டியிலிருந்து விலகுவதாக அவர் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள டேல் ஸ்டெய்ன், கிரிக்கெட் பயணத்தில் உறுதுணையாகத் திகழ்ந்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 

;