games

img

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக மீண்டும் சீன நிறுவனம்....

சென்னை 
கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய உள்ளூர் டி-20 தொடரான ஐபிஎல் தொடரின் 14-வது சீசனுக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் இன்று (வியாழனன்று) தொடங்கிய நிலையில், டைட்டில் ஸ்பான்சராக விவோ என்ற சீன மொபைல் நிறுவனம் மீண்டும் இணைந்துள்ளது. ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக 2018-ஆம்ஆண்டு இணைந்த விவோ நிறுவனம் 5 ஆண்டு கால டைட்டில் ஸ்பான்சராக இணைவதற்கு அதே ஆண்டு ரூ. 2,199 கோடியை செலுத்தியது. முதல் 2 ஆண்டு பிரச்சனை இல்லாமல் தனது ஸ்பான்சர் வேலையை கவனித்த விவோக்கு கடந்த ஆண்டு இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையேயான லடாக் எல்லைமோதல் காரணமாக இந்திய அரசு சீன  நிறுவனங்களுடனான தொடர்புகளை துண்டித்தது. 

இதனால் 13-வது சீசன் ஐபிஎல் தொடரிலிருந்து விவோ ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. கடைசி நேரத்தில் ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த நிலையில், நடப்பாண்டுக்கான  ஐபிஎல் தொடரில் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சராக மீண்டும் இணைந்துள்ளது.  

;