games

img

சென்னை டெஸ்ட்... பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அஸ்வின் கலக்கல்....

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி சென்னையில் சனியன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் ரோஹித் சர்மாவின் (161 ரன்கள்) அதிரடியால் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலந்து அணி தனது முதல்  இன்னிங்சில் தமிழக வீரர் அஸ்வினின் (5 விக்கெட்) மாயாஜால சுழலில் சிக்கி 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 200 ரன்கள்  எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற தமிழக வீரர் அஸ்வின், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க டி-20 போட்டியை போன்று அதிரடியாக போராடினார். கோலி 62 ரன்களில் வெளியேற அஸ்வின் மின்னல் வேக அதிரடியில் ருத்ரதாண்டவத்துடன் சதமடித்து அசத்தினார். அஸ்வினுக்கு இது 5-வது டெஸ்ட் சதமாகும். இறுதிவரை ரன் குவிப்பில் கலக்கிய அஸ்வின் 10-வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்திய அணிக்கு 85.5 ஒவர்களில் 286 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி நட்சத்திரங்கள் சொதப்ப, தனி ஒருவனாக பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்தி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்து வரும் அஸ்வினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

;