தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்தில் சென்னை (சேப்பாக்கம்) - கோயமுத்தூர் ஆகிய அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை அணியும், முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் கோயமுத்தூர் அணியும் களமிறங்குவதால் இறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு : ரூ.1 கோடி
2-ஆம் இடம் : ரூ. 60 லட்சம்
(கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் பரிசுத்தொகை உண்டு)
காமன்வெல்த் பதக்கப்பட்டியல்: ஆஸ்திரேலியா ஆதிக்கம்
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரான பிர்மிங்ஹாம் நகரில் வெள்ளியன்று தொடங்கியது. மொத்தம் 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடர் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா - 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. (மாரை 5 மணி நிலவரம்)