games

img

அகமதாபாத் டெஸ்ட் போட்டி... 112 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி....    

அகமதாபாத்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

 4 போட்டிகளை டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றியுடன் தொடரை சமனில் வைத்துள்ள நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலத்தின் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானங்களுள் ஒன்றான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் பகலிரவு இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்களின் துடிப்பான பந்துவீச்சால் தொடக்கம் முதலே திணறிய இங்கிலாந்து அணி 100 ரன்களை கடப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழற்பந்துவீச்சாளர்கள் அசத்தலாக செயல்பட்டனர். அக்சார் படேல் (6 விக்.,) - அஸ்வின் (3 விக்.,) ஆகியோர் இணைந்த சுழற்பந்து கூட்டணி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்ட இங்கிலாந்து அணி 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு சுருண்டது. 

தொடர்ந்து தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சை விளையாடி வருகிறது. 

;