games

img

அகமதாபாத் டெஸ்ட்.... இங்கிலாந்து அணி மீண்டும் திணறல்...   

அகமதாபாத்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  4 போட்டிகளை டெஸ்ட் தொடரின் முதல் மூன்று ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சர்ச்சைமிக்க குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது.  

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த டெஸ்ட் போட்டியை போல அஸ்வின் - அக்சார் சூழல் கூட்டணியில் சிக்கிய இங்கிலாந்து அணி 121 ரன்கள் எடுப்பதற்குள் மிடில் ஆர்டரை இழந்தது. சூழல் கூட்டணியுடன் சிராஜும் (2) வேகத்தில் கலக்க இங்கிலாந்து அணி  முதல் இன்னிங்ஸில் 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 55 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அக்சார் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினர்.  

தொடர்ந்து தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.    

;