games

img

10 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கலாம் – பாப் டூ பிளஸ்சிஸ்  

10 ஓவர் கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கலாம் என பாப் டூ பிளஸ்சிஸ் பேட்டி அளித்துள்ளார்.  

அபுதாபி – ஐக்கிய அரசு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியானது வருகிற 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டூ பிளிஸ்சிஸ் முதல்முறையாக பங்கேற்க உள்ளார்.  

இந்த போட்டி குறித்து இவர் கூறியதாவது, நான் 3 வடிவிலான போட்டிகளிலும் நீண்ட காலமாக விளையாடி இருக்கிறேன். தற்போது 10 ஓவர் போட்டி என்னை மிகவும் கவர்ந்து இருக்கிறது. விரைவில் முடிவுகள் கண்டறியப்படும் 10 ஓவர் போட்டிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்த வடிவிலான போட்டியை ஒலிம்பிக்கில் பயன்படுத்த முடியும். விறுவிறுப்பு நிறைந்த இந்த போட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்று கூறினார். 

;