games

img

உலகக்கோப்பை கால்பந்து 2022

ஓய்வுக்காக உறங்கிய கத்தார்

உலகக்கோப்பைக்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தொழுகை நாளான வெள்ளியன்று கத்தார் நாடே அமைதியாகக் காணப்பட்டது. தொழுகை ஒருபக்கம் என்றாலும் உலகக்கோப்பை பணிகள் நிறைவடைந்த ஓய்வு, அடுத்து  20 நாட்களுக்கு மேல் ஓய்வு இல்லாமல் பிசியாக இருக்கப் போகிறோமே என்ற முன்னெச்சரிக்கை ஓய்வு என இரண்டு விதமான ஓய்வுகளால் கத்தார் நாடு வெள்ளியன்று ஓய்வெடுத்ததால் முக்கிய சாலைகள் காலியாக இருந்தன. வெள்ளிக்கிழமை அதிகாலையில் இஸ்லாமிய இசைகளும் காணப்படவில்லை. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே தொழுகை செய்தனர்.

சிறைபிடிக்கப்படும் பேருந்துகள்

உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக கத்தார் சென்றுள்ள நாடுகள் தோஹா விமான நிலையத்தில் இருந்து பேருந்துகள் மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பேருந்துகளை ரசிகர்கள் நிறுத்தி “நாங்கள் இருக் கிறோம், வென்று வாருங்கள்” என ஆதரவு கோஷங்களால் (சொந்த நாட்டினரின்) சிறை பிடிக்கப்படுகின்றனர்.

துனிசியா நாட்டின் பேருந்தை சிறைபிடித்து ஆதரவை வெளிப்படுத்தும் ரசிகர்கள்....

ஜெர்சிகளுக்கான கட்டுப்பாடு

உலகக்கோப்பையில் பங்கேற்கும் 32 நாடுகளின்  ஜெர்சிகள் (உடை) வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய வசதிபடைத்த கால்பந்து நாடுகளின் ஜெர்சிகளை நைக், அடிடாஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் வடிவமைத்துள்ளது. ஜெர்சிகள் மிகவும் தரமாக இருக்க வேண்டும். எளிதில் கிழியும்படி இருக்கக் கூடாது. காரணம் பந்தை கடத்தும், பறிக்கும் சமயத்தில் எதிரணி வீரர்கள் ஜெர்சியை தான் முதலில் இழுப்பார்கள். மேலும் வீரர்கள் கீழே அதிகம் விழுவதால் ஜெர்சி சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் ஜெர்சியின் தரம் மிகவும் முக்கியமானது.

கொடிகளுக்கு ஏற்ப ஜெர்சி இருக்க வேண்டும்

உலகக்கோப்பையில் விளையாடும் நாடுகள் தங்கள் நாட்டின் தேசிய கொடியின் வண்ணத்தின் அடிப்படையிலேயே ஜெர்சியை அணிய வேண்டும். ஒரு  போட்டியில் இரு அணிகளும் ஒரே மாதிரி ஜெர்சி அணிய நேரிட்டால் ஜெர்ஸியின் கலரை மாற்றி அணியலாம். மற்ற ஆட்டங்களில் தேசிய கொடிக்கு ஏற்ப ஜெர்சி இருக்க வேண்டும்.

விளம்பரத்திற்கு அனுமதி இல்லை

ஜெர்சியில் நாடுகளின் கொடி, தேசிய கால்பந்து  சின்னம், தயாரித்த அணியின் லோகோ  மட்டுமே இருக்க வேண்டும். மற்றபடி  கிரிக்கெட் விளையாட்டு போல தனி ஸ்பான்ஸர்களின் பெயர்கள் இருக்கக் கூடாது. லெக் கிட், காலணி என அனைத்திலும் விளம்பரத்திற்கு  அனுமதி இல்லை. பெயர்கள் அளவு சரியாகவும், உடையின் அளவு உடம்பிற்கு ஏற்றபடி சரியாக இருக்க வேண்டும். 

வீரர்கள் மட்டும் 831 பேர்...

உலகக்கோப்பையில் பங்கேற்கும் 32 நாடுகளில் இருந்து வீரர்கள் மட்டும் 831 பேர் கத்தார் வந்துள்ளனர். இதுபோக அணிகளின் குழு, பயிற்சியாளர் என ஒரு அணியில் இருந்து சராசரியாக 200 பேருக்கு கூடுதலாக கத்தார் வந்துள்ளனர்.