games

img

விளையாட்டு

ஐரோப்பா நேசன்ஸ் லீக் கால்பந்து இறுதியில் போர்ச்சுக்கல்

ஐரோப்பா நேசன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 48ஆவது நிமிடத்தில் (ப்ளோரி யன்)  முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. எனினும் சுதாரித்துக் கொண்ட போர்ச்சுக்கல் வீரர்கள் தாக்குதல் பாணியை கையிலெடுத்தனர். இதன் விளைவாக போர்ச்சுக்கல் வீரர் பிரான்சிஸ்கோ 63ஆவது நிமிடத்தில் கோலடித்தார். அடுத்த 5 நிமிட இடைவெளியில் போர்ச்சுக்கல் நட்சத்திர வீரர் ரொனால்டோ (68ஆவது நிமிடம்) கோலடித்தார்.  இதுவே வெற்றி கோலாக அமைந்த நிலையில், ஆட்டநேர முடிவில் போர்ச்சுக்கல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அல்லது பிரான்ஸ் அணியுடன் போர்ச்சுக்கல் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

பிரெஞ்சு ஓபன் 2025: ஜோகோவிச் அசத்தல்

கிராண்ட்ஸ்லாம் போட்டிக ளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 124ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.  இந்தத்தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதன்கிழமை அன்று நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசை யில் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர் மனியின் ஜுவரேவை எதிர்கொண் டார்.  முதல் செட்டை 6-4 என்ற  கணக்கில் ஜுவரேவ் கைப்பற்றினா லும், கடைசி 3 செட்டில் ஜோகோ விச் பிரம்மாண்டமாக ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக இரு வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்த நிலையில், இறுதியில் 4-6, 6-3, 6-2, 6-4  என்ற செட் கணக்கில் ஜோகோவிச் அபார வெற்றி பெற்று அரை யிறுதிக்கு முன்னேறினார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் 2025 திண்டுக்கல் - கோவை அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடர் பாணியில் தமிழ்நாட்டில் டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமியர் லீக்) என்ற பெயரில் டி-20 கிரிக்கெட் தொடர் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 8 சீசன் முடிந்துள்ளன. இதில் அதிகபட்சமாக சேப்பாக்கம் (சென்னை) அணி 4 முறை கோப்பை யை கைப்பற்றியுள்ளது. அதே போல கோவை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் ஆகிய அணிகளும் பட்டம் வென்று இருக்கின்றன. இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 9ஆவது சீசன் வியாழக் கிழமை அன்று கோவையில் தொடங்கின. முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் - கோவை அணிகள் மோதிய நிலையில், வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் - சென்னை (சேப்பாக்கம்) அணிகள் மோது கின்றன. இந்த ஆட்டம் கோவை எஸ் என்ஆர் மைதானத்தில் நடைபெறு கிறது. 9ஆவது சீசன் டிஎன்பிஎல் தொடர் ஜூலை 6ஆம் தேதி வரை ஒரு  மாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் - சென்னை இடம் : எஸ்என்ஆர்  மைதானம் - கோவை நேரம் : இரவு 7:15 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, பேன்கோடு (FAN CODE)