games

img

ஐபிஎல் ஏலம் 2023 சென்னையில் பென் ஸ்டோக்ஸ்

16-வது ஐபிஎல் டி-20 தொடர் அடுத்த ஆண்டு (2023) கோடை காலங்களில் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக 10 அணிகள் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்ட நிலையில், 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். வெளியேற்றப்பட்டுள்ள வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐபிஎல் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெள்ளியன்று நடைபெற்றது. 87 இடங்களுக்கு 405 வீரர்கள் (273 இந்தியர், 132 வெளிநாட்டவர்) போட்டியில் களமிறங்கிய நிலையில், ஏலத்தின் முதல் நபராக நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சனை ரூ.2 கோடிக்கு எடுத்தது குஜராத் அணி. மேலும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனை ரூ. 18.50 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி (மாலை 4:30 நிலவரம்)

அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்

சாம் கர்ரன் (இங்கிலாந்து) - ரூ. 18.50 கோடி (பஞ்சாப்) கேமரான் கிரீன் (ஆஸ்திரேலியா) - ரூ. 17.5 கோடி (மும்பை) பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - ரூ.16.25 கோடி( சென்னை) நிக்கோலஸ் பூரான் (மே.இ.தீவுகள்) - ரூ. 16  கோடி (லக்னோ) ஹாரி புரூக் (இங்கிலாந்து) - ரூ.13.25 கோடி (ஹைதராபாத்) மயாங்க் அகர்வால் (இந்தியா) - ரூ.8.25 கோடி (ஹைதராபாத்) ஜேசன் ஹோல்டர் (மே.இ.தீவுகள்) - ரூ. 5.75 கோடி (ராஜஸ்தான்) கிளாசன் (தென் ஆப்பிரிக்கா) - ரூ. 5.25 கோடி (ஹைதராபாத்)