பிரெஞ்சு ஓபன் 2025 சின்னர் - அல்காரஸ் இன்று கோப்பைக்கு பலப்பரீட்சை
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 124ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரு கிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத் தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர் - தரவரிசை யில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயி னின் அல்காரஸை எதிர்கொள்கிறார். கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்க உள்ளார். அதே போல இத்தாலியின் சின்னர் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து ள்ள நிலையில், முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் மகுடத்தை கைப்பற்ற தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறார். இதனால் இந்த ஆட்டம் மிக பர பரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் 7ஆவது முறையாக பட்டம் வென்றார் கார்ல்சன்
உலகின் பிரபல செஸ் சாம்பி யன்ஷிப் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் சாம்பியன் ஷிப் கடந்த வாரம் தொடங்கியது. இந்த தொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்றது. இறுதிச் சுற்றின் முடிவில் உள்ளூர் வீரரும், முன்னாள் உலக சாம்பி யனுமான கார்ல்சன் 16 புள்ளி களைப் பெற்று 7ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் கருவானா இரண்டா வது இடமும், உலக சாம்பியனான தமிழ்நாட்டு வீரர் குகேஷ் 14.5 புள்ளி கள் பெற்று 3ஆவது இடமும் பிடித்துள் ளார். அமெரிக்காவின் நாகமுரா 4 ஆவது இடத்தையும், மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 5ஆவது இடத்தையும் பிடித்துள்ள னர்.
ஐரோப்பா நேசன்ஸ் லீக் கோப்பை யாருக்கு? இன்று நள்ளிரவு ஸ்பெயின் - போர்ச்சுக்கல் மோதல்
ஐரோப்பா நேசன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஜெர்மனி யில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், ஞாயிறன்று நள்ளி ரவு நேரத்தில் நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - போர்ச்சுக்கல் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 2018 முதல் நடைபெற்று வரும் ஐரோப்பா நேசன்ஸ் லீக் தொட ரில் இதுவரை 3 சீசன்கள் நடை பெற்றுள்ளன. 3 சீசனில் போர்ச்சுக்கல் (2019), பிரான்ஸ் (2021), ஸ்பெயின் (2023) ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இத்தகைய சூழலில் 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சி யுடன் ஸ்பெயின் - போர்ச்சுக்கல் கள மிறங்குவதால் இந்த ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர்பா ர்க்கப்படுகிறது.