games

img

டென்மார்க் வீரர் எரிக்செனின் உடல்நிலையில் முன்னேற்றம்...    

கோபன்ஹேகன்
ஐரோப்பிய கண்டத்தில் கால்பந்து விளையாடும் நாடுகளுக்காக யூரோ கோப்பை என்ற பெயரில் கால்பந்து தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்த தொடரின் 16-வது எடிசன் 11-ஆம் தேதி தொடங்கியது. 

தொடரின் 3-வது ஆட்டத்தில் டென்மார்க் - பின்லாந்து அணிகள் மோதின. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையும் தருணத்தில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் திடிரென மைதானத்தில் சரிந்து விழுந்தார். மைதான முதலுதவி பலனிளிக்காத நிலையில், மேல் சிகிச்சைக்காக கோபன்ஹேகன் நகரின் முக்கிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.  

எரிக்செனின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்ததால் 1 மணிநேர இடைவெளிக்கு பின்பு மீண்டும் போட்டி தொடங்கியது. தொடக்கத்தில் நன்றாக விளையாடிய டென்மார்க் அணி வீரர்கள் எரிக்செனின் உடல்நிலை காரணமாக சோர்வாகவும், பதற்றமாகவும் விளையாடினர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பின்லாந்து அணி டென்மார்க் அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.   தற்போதைய நிலவரப்படி எரிக்செனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அணி வீரர்களுடன் குறுஞ்செய்தி மூலம் தகவல் பரிமாறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  

;