games

img

அரை நூற்றாண்டுகளை கடந்த ‘‘கருப்பு துருவ மான்’’.....

‘‘90-களின் பிற்பகுதியிலும் 2000-த்தின் முற்பகுதியிலும் இந்திய கால்பந்து அணிக்காக பாய்சங் பூடியாவுடன் இணைந்து வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கியவர் ஐ.எம்.விஜயன்”.1993, 97 மற்றும் 99 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரராக முடிசூட்டப்பட்டவர். பலமுறை சிறந்த வீரருக்கான விருதை வென்ற முதல் வீரரும் கூட. 2003 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது வழங்கியும் மத்திய அரசால் கௌரவிக்கப்பட்டவர் விஜயன்.

திரை நட்சத்திரமாக...
இந்திய அணியில் மிகச்சிறந்த வீரராகவும் கேரளாவின் ஹீரோவாகவும் திகழ்ந்த விஜயனை, தமிழ் திரைஉலகம் வில்லனாக அறிமுகம் செய்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பிகில்’ திரைப்படத்தில் ராயப்பனை கத்தியால் குத்திக் கொள்ளும் வில்லனாக நடித்திருக்கிறார் விஜயன். இதற்கு முன்பு ‘திமிரு’, ‘கொம்பன்’ படத்திலும் வில்லனாக உலா வந்து தமிழக ரசிகர்களையும் குஷிப்படுத்தி இருக்கிறார்.

இந்திய கால்பந்து உலகிலும் திரைத்துறையிலும் முத்திரை பதித்த விஜயனின் ஆரம்பகால வாழ்க்கைமிகவும் சோகம் நிறைந்தவை.இனிவளப்பிள் மணி விஜயன் (ஐ.எம்.விஜயன்)தனது பதின்பருவத்தில் திருச்சூர் மாநகராட்சி கால் பந்து மைதானத்துக்கு வெளியே, பாட்டிலுக்கு பத்து பைசாவென ‘சோடா’ விற்றுக் கொண்டிருந்தார். குடும்பத்தின் வறுமை அவரை சோடா விற்க தள்ளியது.

கால்பந்து மீதான காதல் அவரை மைதானத்தின் அருகில் சென்று சோடா விற்க சொல்லியது. அவர்வெளியே நின்றாலும் அவரது கால்கள் மைதானத்துக்குள் தான் ஓடிக் கொண்டிருந்தன. ஒரு நாள் திருச்சூரில் 7 பேர் கால்பந்து போட்டி நடைபெற்றன.அவரும் மைதானத்துக்குள் சென்றார். இம்முறை சோடாவிற்கு அல்ல கால்பந்துவிளையாட.மைதானம் முழுக்க ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. உருவத்தில் நெளிந்தும் நிறத்தில் கருமையும் 17 வயதே நிரம்பியசிறுவனான விஜயன், ‘துருவ மான்’ போல் பாய்ந்தோடி அடித்தகோல்கள் ரசிகர்களின் விசில், கைதட்டல் கேரளாவை முழுக்ககவ்விக்கொண்டது.அன்றைய தினம் அவரது வாழ்நாளின் முக்கிய நாளாகும்.திருப்புமுனையை ஏற்படுத்திய மறக்க முடியாத தினமும்கூட. அந்தப் போட்டியை கண்டுகளித்த அன்றைய கேரள மாநில காவல்துறை தலைவர் எம்.கே.ஜோசப் காவல்துறை அணியில்விளையாட விஜயனை அழைத்துச் சென்றார். அதன் பிறகு வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.தனது இருபதாவது வயதில் 1989 ஆம் ஆண்டு இந்தியஅணிக்கு தேர்வு செய்யப்பட்டார். நேரு கோப்பை, ஒலிம்பிக் கிற்கு முந்தைய ஃபிபா உலக தகுதி சாம்பியன்ஷிப் போன்றபல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மன்னாதி மன்னன்...
1999ஆம் ஆண்டு நேபாள் தலைநகர் காட்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளில், பூடானுக்கு எதிரான ஆட்டம்தொடங்கிய 12 நொடிகளில் விஜயன் அடித்த பந்து, கோல் போஸ்டுக்குள் பறந்து போய் விழுந்தது. இதுவே சர்வதேச கால்பந்து உலகில் அதிவேக கோலாகும்.இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஜயன் கேரள ரசிகர்களால் ‘பிளாக் பக்’ (கருப்பு துருவ மான்) என்று செல்லமாகஅழைக்கப்பட்டார்.

தேசிய அணியில் இடம் கிடைத்ததும் இந்திய அணியின் கேப்டன் பாய்சங் பூடியாவுடன் எதிரணிகளை பந்தாட தொடங்கினார். இதனால் இவர்களை ‘டெட்லி காம்போ’ வாகவே அழைத்தனர் ரசிகர்கள்.திருச்சூர் நகரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர் விஜயன். அங்குள்ள கிருத்துவ சர்ச்சுக்கு சொந்தமான சி.எம்.எஸ்.எஸ்.எஸ்.எஸ். உயர்நிலைப்பள்ளியில் ஆரம்ப கல்வியை பயின்றார். இந்திய அணிக்கு இவர் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதை
யாராலும் மறுக்க முடியாது. 2003 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க-ஆசிய போட்டியில் 4 கோல் அடித்து அதிக கோல் அடித்த இந்தியவீரர் என்ற பெருமையும் பெற்றார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விஜயன் கால்பந்துஉலகில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார் 2003 ஆம்ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு அணியை திறம்பட வழிநடத்தினார்.கேரள காவல்துறை, ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான், எஃப் சி கொச்சின், சர்ச்சில் பிரதர்ஸ், ஜேசிடி மில்ஸ் என பல்வேறுகிளப் அணிக்காக 338 போட்டிகளில் விளையாடி 250 கோல்கள்அடித்த விஜயன், இந்திய அணிக்காக 79 போட்டிகளில் விளையாடி 40 கோல்கள் அடித்து அசத்தி, விளையாட்டின் உச்சத்தில்இருக்கும்போதே 2013 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். மலையாளிகளின் நாடி நரம்பெல்லாம் ஊறிப் போய் கிடக்கும்கால்பந்து நாயகன் விஜயனுக்கு (ஏப்ரல் 25) 52 ஆவது பிறந்தநாள்.

கட்டுரையாளர் : சி.ஸ்ரீராமுலு
 

;