குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் 2023 டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங் கானா, மகாராஷ்டிரா (மும்பை, புனே), ராஜஸ்தான், மேற்கு வங்கம், தில்லி, பீகார், உத்தரப்பிரதேசம், குஜ ராத் ஆகிய 10 மாநிலங்களில் 11 கட்ட மாக லீக் ஆட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஹரியானா வின் முக்கிய நகரான பஞ்ச்குலாவில் கடைசி மற்றும் 12-ஆம் கட்ட லீக் ஆட்டங் கள் புதனன்று நிறைவு பெறுகிறது. அதோடு புரோ கபடி தொடருக்கான லீக் ஆட்டங்களும் நிறைவு பெறும் நிலை யில், 5 நாட்கள் விடுமுறைக்கு பிறகு பிப்ரவரி 26-ஆம் தேதி குவாலிபையர் ஆட்டங்கள் தொடங்குகிறது.
கடைசி லீக் ஆட்டங்கள்
புனே - உத்தரப்பிரதேசம்
(131-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி
ஹரியானா - பெங்களூரு
(131-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி
இடம் : தேவிலால் மைதானம், பஞ்ச்குலா, ஹரியானா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)