games

img

விளையாட்டு செய்திகள்

குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ள புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசன் 2023 டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, கர்நாடகா,  தெலுங்கானா, மகாராஷ்டிரா (மும்பை, புனே), ராஜஸ்தான், மேற்கு வங்கம், தில்லி, பீகார், உத்தரப்பிரதேசம்,  குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் 11 கட்டமாக லீக் ஆட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஹரியானாவின் முக்கிய நகரான பஞ்ச்குலாவில் கடைசி மற்றும் 12-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெற்றது. லீக் ஆட்டங்களில் ஏற்பட்ட களைப்பை போக்க புரோ கபடி தொடருக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறைக்கு பிறகு பிப்ரவரி 26-ஆம் தேதி குவாலிபையர் ஆட்டங்கள் தொடங்குகிறது.

3 முன்னாள் சாம்பியன்கள் அவுட்
முன்னாள் சாம்பியன்களான பெங்கால், பெங்களூரு, மும்பை அணிகள் சொதப்பலான ஆட்டத்தால் லீக் சுற்றிலேயே வெளியேறின. நட்சத்திர அணிகளில் ஒன்றான  தமிழ்நாடு போதுமான புள்ளிகள் இல்லாததால் வெளியேறி யது. எனினும் கடைசி நேரத்தில் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்ற 6 அணிகளை தொடர் வெற்றி மூலம் கதி கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
1. ஜெய்ப்பூர் 2. புனே 3. தில்லி 4. குஜராத்
5. ஹரியானா 6. பாட்னா
ஹைதராபாத்தில் மட்டும்...
குவாலிபையர் ஆட்டங்கள்,  இறுதி ஆட்டங்கள் என 
அனைத்தும் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.