games

கோப்பை யாருக்கு? பார்டி - காலின்ஸ் பலப்பரீட்சை

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனியன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மகளிர் டென்னிஸ் உலகின் முதல் வீராங் கனையான ஆஸ்திரேலியாவின் பார்டி -  அமெரிக்காவின் காலின்ஸை எதிர்கொள் கிறார். காலின்ஸ் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இறுதிக்கு முன்னேறினார். அதே போல 2  முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள  பார்டி ஆஸ்திரேலியா ஒபனில் முதன்முறை யாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் முனைப்பில் காலின்ஸும், சொந்த மண்ணில் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம்  பட்டம் வெல்லும் முனைப்பில் பார்டியும் களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடவர் இரட்டையர்  

ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஜோடிகளான கிர்ஜியோஸ் - தனாசி, எபிடன் - மேக்ஸ் ஜோடிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் மதியம் 3:15 மணிக்கு தொடங்குகிறது. சேனல் : சோனி டென் வரிசைகள் 

புரோ கபடி 
இன்றைய ஆட்டங்கள் 
குஜராத் - தில்லி (இரவு 7:30) / தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் (இரவு 8:30)
இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகிறது.
 

;