games

img

விளையாட்டு முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

அரையிறுதியில் கோகா கவுப் 

112 ஆண்டு பழமையான டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகா கவுப், தரவரிசையில் இல்லாத உக்ரைனின் மார்ட்டா கோஸ்டிக்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற கோகா கவுப் 6-7 (6-8), 7-6 (7-3), 2-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். கோகா கவுப் சமீபத்தில் நிறைவு பெற்ற அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகோவிச் அபாரம்
ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரும், செர்பிய நாட்டவருமான நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 14-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீரரான பிரிட்ஜை 7-6 (7-3), 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ரஷ்யா, பெலாரஸுக்கு ஒரு நியாயம்? இஸ்ரேலுக்கு ஒரு நியாயமா?அகற்றாமல் இருக்கும் இஸ்ரேல் கொடி

உக்ரைன் மீதான தாக்குதல் கார ணமாக ரஷ்யா மற்றும் அதனு டைய நட்பு நாடான பெலாரஸ் நாடு களின் கொடிகள் விளையாட்டு தளத் தில் இருந்து 2 ஆண்டுகாலமாக நீக்கப் பட்டுள்ளன.

அதாவது டிஜிட்டல் ஸ்கோர் கார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்து ரஷ்யா, பெலா ரஸ் கொடிகள் இருக்காது. ரஷ்யா - உக்ரைன் போரினைப் போலவே, இஸ்ரேல் நாடு பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா மீது தொடர் தாக்கு தல் நடத்தி வருகிறது.

இந்த போர் கார ணமாக ஆஸ்திரேலிய ஓபன் மைதான களத்தில் இருந்து இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் கொடிகள் அகற்றப் பட்டுள்ளன. ஆனால் டிஜிட்டல் ஸ்கோர் கார்டு பிரிவுகளில் இஸ்ரேல் நாட்டின் கொடி அகற்றப்படாமல் உள் ளன.

 இஸ்ரேல் நாட்டின் வீரர்கள் பெயர்களுடன் கொடியும் டிஜிட்டல் ஸ்கோர் கார்டில் காண்பிக்கப்படுகிறது ரஷ்யா, பெலாரஸுக்கு ஒரு நியாயம்? இஸ்ரேலுக்கு ஒரு நியாயமா? என பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.