games

img

உலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்றில் இந்திய அணி தோல்வி

2022 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பிடித்தது.
அந்தப் பிரிவில் கத்தார், ஓமன், ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகளும் அங்கம் வகித்தன. உலக கோப்பை போட்டிக்கான தகுதி வாய்ப்பை இழந்து விட்ட இந்திய அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 புள்ளிகளுடன் தனது பிரிவில் 4வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் எஞ்சிய தகுதி சுற்று ஆட்டங்கள் கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று நடைபெற்றது. இதில்  ஆசிய சாம்பியனான கத்தார் அணியுடன் இந்திய அணி மோதியது. இதில் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் கத்தார் அணியிடம் தோல்வியடைந்தது.

;