games

img

விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தொடரை புறக்கணித்தது ஈரான் விளையாட்டுத் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெறுகிறது. ஜூன் 11 தொடங்கும் இந்த தொடரை புறக்கணிப்பதாக முன்னணி கால்பந்து அணியான ஈரான் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அகமது துன்யாமலி,”ஈரானுக்கு எதிராக அமெரிக்கா செய்த கொடூரமான செயல்கள் மிக மோசமானவை. எங்கள் நாட்டின் உயர் தலைவர் காமேனி அமெரிக்காவால் கொல்லப் பட்டார். கடந்த 9 மாதங்களில் எங்கள் நாட்டின் மீது இரண்டு போர் களைத் திணித்து, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளனர். எங்களால் நிச்சயமாக உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாது” என அவர் உறுதியாக கூறியுள்ளார். அமெரிக்கா, பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை ஈரான் புறக்கணிக்க உள்ள தாக கடந்த வாரமே செய்திகள் வெளி யாகின. உடனே சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா),”ஈரான் அணி உல கக்கோப்பை கால்பந்து விளை யாட்டில் பங்கேற்க மற்றும் அமெரிக்கா வருவதற்கு அனுமதிக்கப் படும்” என அறிக்கை வெளியிட்டது. அதே போல அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “ஈரான் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற் பதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை” எனக் கூறினார். அதே சமயத்தில் பிபா தலைவர்  கியானி இன்பான்டினோ, டிரம்ப்பை  சந்தித்து இது குறித்து விவாதித்த தாகவும், ஈரான் அணிக்கு அனுமதி வழங்கப்படும் என உறுதி அளிக்கப் பட்டதாகவும் கூறினார். ஆனாலும் ஈரான் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க முடியாது என வெளிப்படையாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினும் சந்தேகம் தான்

ஸ்பெயினில் ரோட்டா, மோரோன் ஆகிய 2 இடங்களில் அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளன. இந்த தளங்கள் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாரானது. ஆனால்  ஸ்பெயின் அரசு அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்து விட்டது. நாங்கள் நட்பு நாடாக இருந்தாலும், சர்வதேசச் சட்டங்களை மீறும் செயல்களுக்குத் துணை நிற்க மாட்டோம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறினார். ஸ்பெயினின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “ஸ்பெயினுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்கிறோம்” என மிரட்டல் விடுத்தார். ஆனால் பெட்ரோ சான்செஸ்,”யாரோ ஒருவரின் மிரட்டலுக்குப் பயந்து எங்களது மதிப்பீடுகளுக்கு மாறாகச் செயல்பட மாட்டோம்” என பதிலடி கொடுத்தார்.  குறிப்பாக புதனன்று ஈரான் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலுக்கான தனது தூதரை ஸ்பெயின் திரும்பப் பெற்றுள்ளது. நிலைமை இப்படி உள்ள சூழலில் ஸ்பெயின் நாடு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்குமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் : ஜோகோவிச் அவுட்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்றில், தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் 14ஆவது இடத்தில் பிரிட்டனின் டிராப்பரை எதிர்கொண்டார். தொடக்கத்தில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னர் சுதாரித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராப்பர் 4-6, 6-4, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.