games

img

விளையாட்டு

களிர் உலகக்கோப்பை யாருக்கு? இன்று இறுதி ஆட்டம் இந்தியா - தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை

13ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கை (பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் மட்டும்) நாடுகளில் கூட்டாக செப்., 30 அன்று தொடங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் இந்த தொடரில் களமிறங்கின. லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இத்தகைய சூழலில் புதன்கிழமை அன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று, இறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, 7 முறை உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு நாடுகளும் இதுவரை உலகக்கோப்பை வென்றது இல்லை என்ற நிலையில், 3ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தும் முனைப்பில் களமிறங்குகிறது. அதே போல முதன்முறையாக இறுதிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணியும், உலகக்கோப்பையை கைப்பற்றும் (முதன்முறையாக) முனைப்பில் களமிறங்குகிறது. எனவே இரு அணிகளும் உலகக்கோப்பையின் மீது குறியாக களமிறங்குவதால் இறுதி ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு? இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களை புரட்டியெடுத்துள்ளன. அதே போல பலம், பலவீனம் ஆகிய இரண்டிலும் இரு அணிகளும் சரிசமமாக இருப்பதால் எந்த அணிக்கு கோப்பை என உறுதியாக கருத்து எதுவும் கூற முடியாது.  ஆனால் தென் ஆப்பிரிக்கா அணி பலமான பேட்டிங்கை கொண்டது. அந்த அணியின் 8 வீராங்கனைகளும் பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர்கள். அதனால் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எளிதாக (338 ரன்கள்) சேசிங் செய்து விட்டோம் என அசால்ட்டாக விளையாடினால் இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். பந்துவீச்சிலும் தென் ஆப்பிரிக்கா பலமாகவே உள்ளதால், இந்திய அணி மிகவும் கவனமாக விளையாடினால்  உலகக்கோப்பையை எளிதாக கைப்பற்றலாம். இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங், பந்துவீச்சில் சூப்பர் பார்மில் உள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது, பழக்கப்பட்ட மைதானம் என்பதால் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல 15% கூடுதல் சாதகம் உள்ளது. குறிப்பாக டாஸ் வெல்லும் அணி கோப்பையை வெல்ல சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் டாஸ் நிகழ்வு முதல் உலகக்கோப்பை இறுதி ஆட்டம் சுவாரஸ்யமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசுத்தொகை சாம்பியன் பட்டம் :

ரூ. 39.75 கோடி 2ஆம் இடம் : ரூ.19.87 கோடி அரையிறுதியில் வெளியேற்றம் : ரூ.9.97 கோடி (தலா 2 அணிகள்) (இதுபோக லீக் சுற்று மற்றும் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுத்தொகை உள்ளது)

இந்தியா    -    தென் ஆப்பிரிக்கா

இடம் : நவி மும்பை, மகாராஷ்டிரா நேரம் : மதியம் 3:00 மணி சேனல் ; ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார்