games

img

விளையாட்டு...

தண்ணீரை வெளியேற்றக் கூட உ.பி., அரசிடம்  திட்டம் இல்லையா?

மழைநீர் தேக்கத்தால் கான்பூர் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டமும் ரத்து

டெஸ்ட், ஒருநாள் என இரண்டு விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச  அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி  பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி உத்தரப்பிர தேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.  மோசமான வானிலை காரணாமாக (சாரல் மழை) 2ஆவது டெஸ்ட்  போட்டியின் முதல் நாள் ஆட்டம் பாதிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், சனியன்று நடைபெறவிருந்த 2ஆவது நாள் ஆட்டமும் ஒரு ஓவர் கூட வீசாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஞாயிறன்று மழையின் அளவு சற்று குறைந்து சாரலாக உதிர்ந்தாலும், மைதானத்தில் தேங்கி இருந்த நீரை வெளியேற்ற போதுமான அளவில் வசதிகள் இல்லாததால், 3ஆவது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.  பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டுமே... “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களான தமிழ்நாடு (சென்னை), கர்நாடகா (பெங்களூரு), கேரளா (திருவனந்தபுரம்), மேற்கு வங்கம் (கொல்கத்தா), ஜார்க்கண்ட் (ராஞ்சி) உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள  கிரிக்கெட் மைதானங்களில் பிரம்மாண்ட வடிகால் வசதிகள் உள்ளன. அதனால் எவ்வளவு பெரிய மழை பெய்தா லும் மேற்குறிப்பிட்ட சர்வதேச மைதானங்களில் 2 மணி நேரத்தில் மழைநீர் வெளியேறி மைதானம் உலர்ந்து விடும். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள (கான்பூர், அகமதாபாத் உள்ளிட்ட) சர்வதேச மைதானங்களில் வடி கால் வசதி மற்றும் மழையை எதிர்கொள்ள போதுமான வசதி கள் எதுவும் கிடையாது. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள  கிரிக்கெட் வாரியங்கள் டிக்கெட் வருவாய் மட்டுமே பெரி தாக பார்க்கின்றன. போட்டியை பிரச்சனையின்றி நடத்தவும், ரசிகர்களின் பாதுகாப்பு பற்றி தொடர்பாகவும்  கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாகவே கான்பூர் மைதானத்தில் மழைநீர் புகுந்து விளையாடிவருகிறது.

ஐபிஎல் அணிகள் ஒவ்வொரு தொடருக்கும் தனியாக சம்பளம் வழங்க வேண்டும்

இளம் வீரர்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வந்த பிசிசிஐ

கிரிக்கெட் உலகின் முதன்மை யான உள்ளூர் தொடரான ஐபி எல் தொடரின் 2025ஆம் ஆண்டின்  சீசனுக்காக பல்வேறு புதிய விதி முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது வீரர்களின் சம்பளம் தொடர்பான விதி ஆகும். பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஒரு தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்ளும். அதன் பிறகு ஒவ்வொரு போட்டிக்கும் தனியாக சம்ப ளம் வழங்கப்படும். ஆனால் ஐபிஎல் தொடரில் அப்படி கிடையாது. வீரர் களுக்கு ஒப்பந்தம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. தனியாக சம்பளம் வழங்க மாட்டர்கள். அதாவது ஒரு வீரர் 20 லட்சம் ரூபாய்க்கு தேர்வு செய்யப் பட்டு விட்டால் அடுத்த மூன்று ஆண்டு கள் அதே தொகையில் தான் வீரர்கள் சம்பளம் பெறுவார்கள். இதனை கருத்தில் கொண்டு இனி ஒவ்வொரு தொடரிலும் விளையாடும் வீரருக்கு தனியாக ரூ.7.5 லட்சம் சம்பளமாக வழங்கப்பட வேண்டும் என பிசிசிஐ புதிய விதியை அறிவித்துள்ளது. அதன் படி ஒரு சீசனிலும், ஒரு வீரர் அனைத்துப் போட்டிகளையும் விளை யாடி விட்டால் அவருக்கு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கிடைக் கும். இது இளம் வீரர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஷா இல்லை... புதிய சம்பள திட்டத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கொண்டுவர வில்லை என்றும், அவர் பெயரளவில் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டார் என கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இளம் வீரர்களுக்காக புதிய சம்பள திட்டத்தை கொண்டு வந்தது பிசிசிஐ துணைத் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராஜிவ் சுக்லா தான் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன.