சஞ்சு சாம்சன் சென்னை அணியின் கணக்கு இதுதான்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக் காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் உள்ளார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ராஜஸ் தான் அணிக்காக அவர் விளையாடி வரும் நிலையில், 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரி மாற்றத்தில் (டிரேட்) சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக கடந்த ஒரு வாரமாக அதிகாரப்பூர்வ மற்ற செய்திகள் வட்டமடித்து வரு கின்றன. குறிப்பாக சஞ்சுவுக்காக சென்னை அணி ஜடேஜா, சாம் கரணை ராஜஸ் தான் அணிக்கு டிரேட் முறையில் மாற்ற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு பிறந்தநாள் வாழ்த்தும் (ராஜஸ்தான் அணியில் இருந்தாலும் சஞ்சுக்கு சென்னை அணி திடீரென வாழ்த்து தெரிவித்தது) ஒரு எடுத்துக்காட்டு ஆகும். தோனிக்கு பதில் சஞ்சு தங்களது அணியில் 15 ஆண்டு களுக்கும் மேலாக விளையாடி வரும் சூப்பர் ஆல்ரவுண்டரான ஜடேஜாவை வெளியேற்ற சென்னை அணி நிர்வா கம் துணிந்து இருப்பது சாதாரண கார ணத்திற்காக அல்ல. அது மிகவும் முக்கியமானது ஆகும். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் செய்ய கூடியவர். விக்கெட் கீப்பர் பணியில் அபாரமாக செயல்பட்டு வருகிறார். 2021 முதல் 4 ஆண்டுகளாக ராஜஸ் தான் அணியின் கேப்டனாக இருக் கிறார். வழிநடத்தும் பண்பு நன்றாக இருக்கிறது. 2022ஆம் ஆண்டு இவரது சிறப்பான வழிநடத்துதலால் ராஜஸ்தான் அணி 2008 சீசனுக்கு பிறகு இறுதிக்கு முன்னேறியது. சென்னை அணியில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் தோனி ஓய்வு பெற்று விட்டால், அவரை போல அவ ரது இடத்தில் யாரை தேடுவது என்ற சிக்கலை அறிந்து கொண்டு தான் சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக தான் சென்னை அணியில் விளையாடி வரும் மிக முக்கிய ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, சாம் கரணை வெளியேற்றவும் துணிந்துள்ளது. சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்துவிட்டால் கேப்டன், விக்கெட் கீப்பர், அதிரடி பேட்டிங் ஆகியவற்றில் இன்னொரு தோனியாக ஜொலிக்க வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சனை திடீரென டிரேட் செய்யும் சென்னை அணியின் கணக்கு இதுதான். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி
சென்னை - மதுரை 2025
இன்னும் 14 நாட்கள்
அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் ஐரோப்பா நாடுகள்
21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் (14 ஆவது சீசன்) தமிழ்நாட்டின் முக்கிய நகரான சென்னை மற்றும் மதுரையில் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏற்பாடுகள் 90% நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து அதிக அணிகள் பங்கேற்கின்றன. ஐரோப்பாவில் இருந்து பெல்ஜியம், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா என 9 அணிகள் பங்கேற்க உள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஆசிய கண்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியா, வங்கதேசம், சீனா, மலேசியா, தென் கொரியா, ஓமன், ஜப்பான் என 7 அணிகள் பங்கேற்க உள்ளன.
