போரைக் காரணம் காட்டி சென்னையை புறக்கணித்த ஐபிஎல் நிர்வாகம்
தமிழ்நாடு ரசிகர்கள் கண்டனம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததால் கடந்த ஒரு வாரமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும் நிலையில், மே 17 முதல் ஜூன் 3ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அட்ட வணையில் சென்னை மற்றும் ஹைதரா பாத் அணிகளின் ஹோம் கிரவுண்ட் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே 10ஆம் தேதி ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோத இருந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெற இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் (மே 25) தில்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல மே 12ஆம் தேதி சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோத இருந்த போட்டி சென்னையில் நடைபெற இருந்தது. இந்த ஆட்டமும் தில்லியில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. பாரபட்சமான முடிவு ; வலுக்கும் கண்டனம் சென்னை, ஹைதராபாத் அணி களின் ஹோம் கிரவுண்ட் போட்டிகள் மாற்றப்பட்டதற்கு பிசிசிஐ வட்டா ரங்கள் அளித்த விளக்கத்தில், “சென்னை மற்றும் ஹைதராபாத் அணி கள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டன. அதனால் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராஜஸ்தான் அணியும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டதே. பிறகு ஏன் அங்கு பஞ்சாப் - மும்பை அணியின் ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது? என பல்வேறு கேள்விகள் கிளம்பியுள் ளன. ஆனாலும் இது திட்டமிட்ட புறக் கணிப்பு என சமூக வலைத்தளங்களில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். இருக்குமோ? மோடி பிரதமர் ஆன பின்பு தமிழ்நாடு மாநிலம் வெகுவாக புறக்கணிக்கப்படுகிறது. பாஜகவை தமிழ்நாடு மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். அதனால் பாஜகவின ருக்கு சாதாரண மக்களவை உறுப்பி னர் பதவி அளிக்க கூட தமிழ்நாடு மக்கள் மறுத்து வருகின்றனர். இதனால் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது. நிலைமை இவ்வாறு உள்ள நிலையில், சென்னை, ஹைதராபாத் அணிகளின் ஹோம் கிரவுண்ட் புறக்கணிப்புக்கு அரசியல் சூழ்ச்சி இருப்பது போன்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. சென்னை அணி தமிழ்நாடு மாநி லத்தின் ஐபிஎல் அணி பிரிவாக உள் ளது. இந்த அணியின் உரிமையாள ரும் என்.சீனிவாசன் தமிழ்நாட்டைச் (கல்லிடைக்குறிச்சி - திருநெல்வேலி) சேர்ந்தவர் ஆவார். அதே போல ஆந்திரா - தெலுங்கானா மாநில கூட்டு ஐபிஎல் அணியாக ஹைதராபாத் உள் ளது. இந்த அணியின் உரிமையாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சன் குழுமம் (கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் - ஹைதராபாத் உரிமையாளர்) உள்ளது. சென்னை, ஹைதராபாத் அணிகளின் உரிமையாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ப தால் மீண்டும் ஹோம் கிரவுண்ட் அளிக்காமல் புறக்கணிக்கப்பட்டுள் ளது என கிரிக்கெட் ரசிகர்கள் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.